ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

       
15




20
வயனங் கோட்டிலோர் மறையோம் பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி யென்போன்
குழவி யேங்கிய கூக்குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீ ருகுத்தாங்
காமக னல்லன் என்மகன் என்றே
காதலி தன்னொடு கைதொழு தெடுத்து


15
உரை
20

       வயனங் கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் - வயனங்கோடு என்னும் ஊரிலுள்ள ஒரு மறையவன், இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்-இளம்பூதி என்னும் பெயருடையவன் வழியிடை வரும்பொழுது, குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டு-குழந்தை அழுத கூப்பீட்டொலியைக் கேட்டு, கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்தாங்கு - கலந்த துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து, ஆமகன் அல்லன் என் மகன் என்றே-இக்குழந்தை பசுவின் மகன் அல்லன் என்னுடைய புதல்வனே என்று கூறி, காதலி தன்னொடு கைதொழுது எடுத்து - தமக்கு மகப் பேற்றினையளித்த கடவுளைக் கைகூப்பி வணங்கி மனைவியுடன் குழந்தையை எடுத்து ;

       பின் காதலி தன்னொடு என்னலால், மனைவியுடன் வருவோன் என்க. இளம்பூதி-இப்பெயர் பூதியெனவே இக் காதையுட் பின்வருகிறது. ஆவானது பாதுகாத்தலைக் கண்டமையின் 'ஆமகனல்லன்' எனக் கூறினான். நாவிடை - நாவினால். நன்னூல்-வேதன் வேதாங்கம் முதலியன. அக் குழவியைத் தனக்களித்தது தெய்வமென்றெண்ணி அத் தெய்வத்தைத் தொழுதன னென்க.