ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

       




25
நம்பி பிறந்தான் பொலிகநங் கிளையெனத்
தம்பதிப் பெயர்ந்து தமரொடுங் கூடி
மார்பிடை முந்நூல் வளையா முன்னர்
நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி
ஓத்துடை யந்தணர்க் கொப்பவை யெல்லாம்
நாத்தொலை வின்றி நன்கனம் அறிந்தபின்


21
உரை
26

       நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என-மகன் பிறந்தனன் இனி நன் கிளை பொலிவுறுக என்று, தம் பதிப் பெயர்ந்து தமரொடுங்கூடி - தம் மூரின்கட் சென்று உறவினருடன் கூடி, மார்பிடை முந்நூல் வனையா முன்னர்-மார்பின்கண் முந்நூல் அணிதற்கு முன்னரே, நாவிடை நன்னூல் நன்கணம் நவிற்றி - நாவினால் மறைகளை நன்கு பயிலச் செய்ய, ஓத்துடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் - மறையோதும் அந்தணர்கட்குப் பொருந்துவன அனைத்தையும், நாத்தொலைவின்றி நன்கனம் அறிந்தபின் - சொல்வன்மை குன்றாமல் நன்குணர்ந்த பின்னர் ;

       முந்நூல் - பூணுநூல், விரைவுபற்றி வனையா முன்னர் என்றார். நாவிடை - நாவால். நவிற்றி - கவிற்றி வென்க. நவிற்றுதல் - அடிப்படப் பயில்வத்தல். நாத் தொலைவின்றி-நாவானது தோற்றல் இல்லையாக; பிறிதோர் சொல் வெல்லுஞ் சொல் இன்மையறிந்து சொல்ல வல்லனாக என்றபடி.