பாத்திர மரபு கூறிய காதை



85




90
இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து
வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும்
வங்கம் போயபின் வருந்து துயர் எய்தி
அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
மன்னுயிர் ஓம்புமிம் மாபெரும் பாத்திரம்
என்னுயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
தவந்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன்
சுமந்தென் பாத்திரம் என்றனன் தொழுது

83
உரை
90

     இழிந்தோன் ஏறினன் என்று - இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கலத்தில் ஏறினன் என நினைந்து, இதை எடுத்து வழங்கு நீர் வங்கம் வல்லிருள் போதலும் - பாய் உயர்த்தி மரக்கலம்கடலில் இரவிலே செல்லலும், வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி - ஆபுத்திரன் மரக்கலம் சென்ற பின்னர் மிக்க துன்பத்தையடைந்து, அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் - அம் மணி பல்லவத்தில் வாழ்வோர்கள் ஒருவரும் இல்லாமையால், மன்னுயிர் ஓம்பும் இம் மாபெரும் பாத்திரம் - பல உயிர்களைப் பாதுகாக்கும் இப் பெருமை பொருந்திய கலத்தினை வறிதே வைத்துக்கொண்டு, என் உயிர் ஓம்புதல் யானோ பொறேன் - என்னுயிரைக் காப்பதையான் பொறுக்ககில்லேன், தவம்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் - இப் பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்செய் தவம் நீங்கியதனால் ஒப்பற்ற துயரத்தால் வருந்துதலுற்றேன், சுமந்து என் பாத்திரம் என்றனன் - ஏற்போரில்லாத இவ்விடத்தில் இப் பாத்திரத்தை யான் சுமத்தலால் வரும் பயன் யாது என்றெண்ணியவனாய் ;

     பாத்திரம் என்னுயிர் மாத்திரை ஓம்புதலை யென்றும், பாத்திரத்தால் ஓம்புதலை யென்றும் உரைத்தலுமாம்.