பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

       
40




45
மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும்
புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி
மக்களை யில்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்றவன் வளர்ப்ப
அரைசாள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான்


40
உரை
45

       மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி-அந் நாட்டினையாளும் மன்னனாகிய பூமிசந்திரன் மண்முகன் எனப் பெயரிய தவமுதல்வனது செவ்விய திருவடியை வணக்கஞ் செய்து, மக்களை இல்லேன் - மக்கட்பேறு இல்லாதவனாகிய யான், மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை என்று - நுமதருளினாலே அரிய புதல்வனை யடைந்தேன் என்று கூறி, அவன் வளர்ப்ப - அவன் வளர்த்துவர, அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் - அரசாளுதலாகிய செல்வம் அவனிடம் உள்ளமையால், நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான். அந்த ஆபுத்திரன் மலர்கள் இணைந்த மாலையையுடைய மன்னவனாயினன் ;     

       மாதவன் : முன்னிலையிற் படர்க்கை. அரைசு : இடைப்போலி. அவன் என்றது பூமிசந்திரனை ; அவன் மகனாகிய ஆபுத்திரன் என்று கொண்டு, அரசாளும் பொறியுண்மையால் என்றுரைத்தலுமாம்; ஆபுத்திரனுக்குப் புண்ணியராசன் என்னும் பெயருண்டென்பது பின்னர் அறியப்படும். நிரைதார்: வினைத்தொகை. இதுகாறும் ஆபுத்திரன் வரலாறு உரைக்கப்பட்டது.