ஆதிரை பிச்சையிட்ட காதை


85




90
மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்

84
உரை
90

       மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்-அறிவை மயக்கும் கள்ளுண்டலையும் நிலைபெற்ற உயிர்களைக் கொல்லுதலையும், கயக்கு அறு மாக்கள் கடிந்தனர்-கலக்கமற்ற அறிவினையுடையோர் விலக்கினர், கேளாய்-கேட்பாயாக, பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்- உலகில் பிறந்தோர்கள் இறத்தலும் இறந்தோர்கள் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்-உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளமையான், நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும்-நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய மேலுலகங்களை யெய்துதலும், அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும் - தீவினைகளை இயற்றுகின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச் செய்யும் நிரயத்தை அடைதலும், உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் - உண்மை என்று உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர், கண்டனை யாகென - நீ அறிவாயாக என்றுரைக்க ;

       
கோறல் - கொன்றுண்டல் என்றுமாம். கயக்கு-கலங்குதல்; ஈண்டுக் கலக்கமாவது அறிவின் திரிபு. சாதலும் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போலுதல் 1"உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" என்னும் வாயுறை வாழ்த்தானும் அறியப்படும். சாதல் உறங்கலும் பிறத்தல் விழித்தலுமென நிரனிறை.அல்லறம்-அறமல்லது; பாவம்.
1 குறள். 339.