உலகவறவி புக்க காதை

       

50




55
வாடுபசி உழந்து மாமுனி போயபின்
பாடிமிழ் அருவிப் பயமலை ஒழிந்தென்
அலவலைச் செய்திக் கஞ்சினன் அகன்ற
இலகொளி விஞ்சையன் விழுமமோ டெய்தி
ஆரணங் காகிய அருந்தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடுநோ யுழந்தனை
வானூ டெழுகென மந்திரம் மறந்தேன்


49
உரை
55

       வாடு பசி உழந்து மாமுனி போயபின் - வாடுதற்கேது வாகிய பசியால் வருந்தி அம் முனிவன் சென்றபின், பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து-ஒலி முழங்குகின்ற அருவிகளையுடைய பயனுடைய பொதியின் மலையை அடைவதை விடுத்து, என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற - மனத்தில் தோன்றியதை ஆராயாது செய்த என் செய்கைக்கு அஞ்சினவனாய் நீங்கிய, இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி-விளங்கும் ஒளியையுடைய விஞ்சையன் துன்பமோ டடைந்து, ஆரணங்காகிய அருந்தவன் தன்னால் - அரிய தெய்வத்தன்மை யுடைய அருந்தவனால், காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை - காரணமில்லாமலும் கடிய நோயால் வருந்தலுற்றனை, வானூடு எழுக என - விசும்பின் மீது எழுவாயாக என்று கூற ;

       அலவலைச் செய்தி - ஆராயாது செய்த செய்தி ; அலமருதலைச் சய்யும்செய்தியென்றுமாம்; 1"அவலலையுடையை" என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. விலகொளி எனப் பிரித்தலுமாம் ; விலகு ஒளி - விட்டு விளங்கும் ஒளி. காரணமின்றியே கனியைச் சிதைத்துக் கடுநோயுழந்தனை என விரித்துரைத்துக்கொள்க.

1  கலி. நெய்தல்: 5.