உதயகுமரன் அம்பலம் புக்க காதை


75




80
மாயிதழ்க் குவளை மலர்புறத் தோட்டிக்
காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண்
அறிவுபிறி தாகிய தாயிழை தனக்கெனச்
செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும்
பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையென்
உளங்கொண் டொளித்தாள் உயிர்க்காப் பிட்டென்று
இடையிருள் யாமத் திருந்தேன் முன்னர்ப்

74
உரை
80

     மாயிதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக் காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் - கரிய இதழ்களையுடைய குவளை மலர்களைப் புறத்தே ஓடச்செய்து காய்கின்ற வேலினை வென்ற கரிய கயல்மீனைப் போன்ற நீண்ட கண்கள், அறிவு பிறிதாகியது ஆயிழை தனக்கெனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும் - மணிமேகலைக்கு அறிவு வேறுபட்டதென்று அறிவிக்குமாறு காதினிடம் ஓடிச் சென்ற அழகும், பளிங்கு புறத்தெறிந்த பவளப்பாவை என் உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு என்று-ஆகிய இவற்றைக்கொண்டு பளிக்கறையின் புறத்தே தோன்றிய பவளப்பாவை உயிரைக் காத்தல் செய்து என் உளத்தில் ஒளித்தாள் என்று, இடையிருள் யாமத்து இருந்தேன் முன்னர்-இருளையுடைய இடையாமத்தில் துயிலாதிருந்தேன் முன்பு ;

     
ஓட்டி வென்ற கண், கயல் நெடுங்கண் என்க. செவியில்உ,ரைக்கப் புக்கதுபோற் சென்ற வென்க. கண்ணின் இயல்பாகிய நீட்சியையோ அல்லது மீட்சியையோ இங்ஙனங் கற்பித்துக் கூறுதலால் இதுதற்குறிப்பேற்றம். கொண்டு - நெரித்ததூஉம் அரும்பியதூஉம் செவ்வியுமாகிய இவற்றைக் கொண்டு, பாவை கொண்டு உயிர்க்காப்பிட்டு என் உளத்து ஒளித்தாள் என்க. இருந்தேன் முன்னர் - துயிலாதிருந்தேனுடைய முன்பு; "பொங்கு மெல்லமளியிற் பொருந்தா திருந்தோன், முன்னர்த் தோன்றி" (7: 6-7) என முன்பு வந்திருத்தல் காண்க. இருந்தேன் ; அங்ஙனமிருந்த என் முன்னர் என வேற்றுத்துரைக்க.