உதயகுமரன் அம்பலம் புக்க காதை

90




95

மாதவன் மடந்தைக்கு வருந்துதுய ரெய்தி
ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும்
மேருக் குன்றத் தூறுநீர்ச் சரவணத்து
அருந்திறன் முனிவர்க் காரணங் காகிய
பெரும்பெயர்ப் பெண்டிர் பின்புளம் போக்கிய
அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த்
தங்கா வேங்கை தனையவள் தணித்ததூஉம்
கேட்டு மறிதியோ வாட்டிறற் குரிசில்

90
உரை
97

     மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும் - கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையின் மேலுள்ள வேட்கையால் மிக்க துயருழந்து தேவர்க்கரசனாகிய இந்திரன் அம்முனிவரால் ஆயிரஞ் செங்கண் அடைந்த செய்தியும், மேருக் குன்றத்து ஊருநீர்ச் சரவணத்து-இமயமலையிலுள்ள பரந்த நீரினையுடைய சரவணப் பொய்கையில், அருந்திறல் முனிவர்க்கு ஆரணங்காகிய - அரிய வலி பொருந்திய முனிவர் எழுவர்க்கு அரிய அணங்குபோல்வாராகிய, பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய - பெரிய புகழையுடைய அவர் மனைவியர் பின்னே உளத்தைச் செலுத்திய, அங்கி மனையாள் - அக்கினிதேவன் மனைவி, அவரவர் வடிவாய்த் தாங்கா வேட்கைதனை அவண் தணித்ததூஉம் - அம் முனிவர் மனைவியரின் வடிவத்தைத் தனித்தனி கொண்டு அவனது நீங்காத வேட்கையைத் தணித்த செய்தியும், கேட்டும் அறிதியோ வாட்டிறல் குரிசில் - கேட்டும் அறியாயோ வாள்வலியுடைய அரசர் பெருந்தகையே ;

துயரெய்தி அவளைச் சேர்ந்து அதனாற் பெற்றதும் என விரித்துரைத்துக் கொள்க. இந்திரன் கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையை விரும்பிச் சேர்ந்து அம் முனிவரிட்ட சாபத்தால் ஆயிரங்கண் பெற்றான் என்பது புராணக்கதை. மேரு - இமயம் ; 1"இமையவில் வாங்கிய" என்பது காண்க. ஊர்தல் - பரத்தல். சரவணம் - தருப்பைக் காடு ; அதனை யுடையதொரு பொய்கையை உணர்த்திற்று. முன்னொரு காலத்தில் அங்கிவானவன் எழுமுனிவர் மனைவியரை விரும்பி அவ்வேதனைபொறுக்கலாற்றாது காட்டிற்குச்சென்றபொழுது, அவன் எண்ணத்தை யறிந்த அவன் மனைவியாகிய சுவாகாதேவி எழு முனிவர் மனைவிகளுள் அருந்ததி யொழிந்தோர் வடிவத்தை முறையே எடுத்து, வேறுவேறு காலங்களிற் சேர்ந்து அவன் வேட்கையைத் தணித்தாள் என்பதும் புராணக்கதை.


1 கலி. 38.