உதயகுமரன் அம்பலம் புக்க காதை




115
உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து
விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி
ஆயிழை யிருந்த அம்பல மெய்திக்
காடமர் செல்வி கடிப்பசி களைய
ஓடுகைக் கொண்டுநின் றூட்டுநள் போலத்
தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோ றீத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும்

112
உரை
118

     உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து - உதயகுமரன் மனம் மாறுதலடைந்து, விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி-விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டப்பெற்ற பெரிய தேரின்மீது ஏறிச் சென்று, ஆயிழை இருந்த அம்பலம் எய்தி - மணிமேகலையிருந்த அம்பலத்தை யடைந்து, காடமர் செல்வி கடிப்பசி களைய ஓடுகைக் கொண்டு நின்று ஊட்டுநள் போல - பேய்களின் பசியை நீக்குதற்கு ஓட்டினைக் கையிற் கொண்டு நின்று ஊட்டுகின்ற காடு கிழாளைப் போல, தீப்பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும் - கொடிய பசியையுடைய மக்களுக்குச் செழுஞ்சோறளித்துக் கடிஞை ஏந்தி நின்ற மணிமேகலையைக் கண்ட வளவில் ;

     
கடி - பேய். ஊட்டுநளாகிய செல்வி போல வென்க.