சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை


140




145

வருக வருக மடக்கொடி தானென்று
அருள்புரி நெஞ்சமொ டரசன் கூறலின்
வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று
ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியவெனத்
தாங்கருந் தன்மைத் தவத்தோய் நீயார்
யாங்கா கியதிவ் வேந்திய கடிஞையென்று
அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும்

139
உரை
145


        வருக வருக மடக்கொடிதான் என்று அருள்புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் - அங்ஙனமாயின் அவ் விளங்கொடி ஈண்டு வருக வருக என்று அரசன் அருண்மிகுந்த உளத்தினோடும் உரைத்தலின், வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று- வாயில் காவலரால் மணிமேகலை அரசன்முன் சென்று, ஆய்கழல் வேந்தன் அருள் வாழிய என - ஆராய்ந்து வீரக் கழலை யணிந்த மன்னவனது அருள் வாழ்க என்று கூற, தாங்கரும் தன்மைத் தவத்தோய் நீ யார் - பொறுத்தற்கரிய தன்மைகளையுடைய தவத்தினை யுடையோய் நீ யார், யாங்காகியது இவ் வேந்திய கடிஞை என்று - நின் கையிலேந்திய இப் பாத்திரம் யாண்டுக் கிடைத்தது என்று, அரசன் கூறலும் - வேந்தன் வினவுதலும், ஆயிழை உரைக்கும் - அவள் கூறுவாள் ;

       அடுக்கு விரைவு பற்றியது. அழைத்து வருக வென்று வாயிலாளர்க்குக் கூற வென்க. தாங்கருந் தன்மை-பிறராற் பொறுத்தற்கரிய தன்மை.