உதயகுமரனை வாளால் எறிந்த காதை

ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு
10 வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்
சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து
அறவோர் கோட்ட மாக்கிய வண்ணமும்
கேட்டன னாகியத் தோட்டார் குழலியை

9
உரை
13

       ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்-மணிமேகலை அரசன்முன் சென்றதனையும் அவளுக்கு மாறாத சிறந்த புகழையுடைய அரசன் கூறியதனையும், சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-சிறைச்சாலையை அழித்து அருள்புரி உள்ளமுடைய முனிவர் வாழும் அறச்சாலையாக்கிய திறத்தையும், கேட்டனன் ஆகி - உதயகுமரன் கேட்டு ;