உதயகுமரனை வாளால் எறிந்த காதை

மழைசூழ் குடுமிப் பொதியிற்குன் றத்துக்
கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான்
மாதவன் மாதர்க் கிட்ட சாபம்
25 ஈரா றாண்டு வந்தது வாராள்
காயசண் டிகையெனக் கையுற வெய்திக்

22
உரை
26

       மழைசூழ் குடுமிப் பொதியிற் குன்றத்து - முகில் சூழும் முடியையுடைய பொதியின்மலையின் மருங்கே, கழைவளர் கான்யாற்று - மூங்கில் வளர்ந்த கானியாற்றின்கண், பழவினைப் பயத்தால். - முற்செய்த தீவினைப்பயனால், மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் - விருச்சிகன் காயசண்டிகைக்கு இட்ட சாபத்தினது, ஈராறு ஆண்டு வந்தது - பன்னிரண்டாவது ஆண்டு வந்தது' இன்னும் வாராள் காயசண்டிகை எனக் கையறவு எய்தி-காயசண்டிகை இன்னும் வந்திலள் எனத் துன்பமெய்தி ;கையறவு - செயலறுதியாகிய துன்பம்.