கந்திற்பாவை வருவதுரைத்த காதை

155

அறவண னருளால் ஆய்தொடி ஆவ்வூர்ப்
பிறவண மொழிந்துநின் பெற்றியை யாகி
வறனோ டுலகின் மழைவளந் தரூஉம்
அறனோ டேந்தி ஆருயி ரோம்புவை

155
உரை
158

       அறவணன் அருளால் ஆய்தொடி அவ்வூர்ப் பிறவணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி - அறவணவடிகளுடைய அருளினால் அவ் வூரில் நீ நினது ஆண்வேடத்தை நீங்கி நின் இயல்பினையுடையையாய், வறன் ஓடு உலகின் மழைவளம் தரூஉம் - வற்கடமாகிய காலம் பரந்த உலகின்கண் மழைவளத்தை அளிக்கும், அறன் ஓடு ஏந்தி ஆயிருர் ஓம்புவை - அறவோடாகிய அமுத சுரபியை ஏந்தி அரிய உயிர்களைப் பாதுகாப்பாய் ;

       பிறவணம் - வேற்றுமதப் பற்றுமாம் வறன் ஓடு : ஓடுதல்- பரத்தல். மழைவளம் - மழையாலுண்டாகும் வளம் ; சோறு.