சிறைசெய் காதை

       


35
அரசா ளுரிமை நின்பா லின்மையின்
பரசு ராமனின் பால்வந் தணுகான்
அமர முனிவ னகத்தியின் றனாது
துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தல் காகந்தி யென்றே
இயைந்த நாமம் இப்பதிக் கிட்டீங்
குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள


33
உரை
39

       அரசாள் உரிமை நின்பால் இன்மையின் - அரசு புரியும உரிமை நின்னிடம் இல்லாமையால், பரசுராமன் நின்பால் வந்து அணுகான் - பரசுராமன் நின்னிடம் போர்புரியுமாறு வாரான், அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்குகிளவியின் யான் தோன்று அளவும் - கடவுண் முனிவராகிய அகத்தியரது அருண்மொழியால் யான் மீண்டு இந் நகரை அடையுமளவும், ககந்தன் காத்தல் - ககந்தனே காப்பாயாக என வுரைத்து, காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு - ககந்தனாற் காக்கப்படுதலின் காகந்தி என்று பொருந்திய பெயரை இந் நகருக்கு இட்டு, ஈங்கு உள்வரிக்கொண்டு அவ் வுரவோன் பெயர்நாள் - காந்தன் வேற்றுருக்கொண்டு சென்ற நாளில் ;
       கணிகை மகனாதலின் அரசாளுரிமை யிலனாயின னென்க. துயர நீங்குகிளவி-துன்பம் ஒழிதற்கேதுவாகிய சொல். ககந்தன் : அண்மை விளி. காத்தல் : வியங்கோள், காக்க 'என்று கூறி' என வருவித்துரைக்க. உள்வரி - வேற்றுரு. இவ் வரசன் அகத்தியரை வேண்டி, அவரது கரகத்திலுள்ள காவிரிநீரைப் பெற்றனனென்பது பதிகத்தால்1 அறியப்படும்.

1 மணி. பதிகம் : 10-12.