சிறைசெய் காதை

       
95




100
தெய்வங் காட்டித் தெளித்திலே னாயின்
மைய லூரோ மனமா சொழியாது
மைத்துனன் மனையாள் மறுபிறப் பாகுவேன்
இப்பிறப் பிவனொடுங் கூடே னென்றே
நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி
மற்றவள் கன்னி மாடத் தடைந்தபின்


95
உரை
100

       தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின் - இன்னணம் கடவுண்மொழியால்மெய்ம்மை காட்டித்தெளிவிக்கப்பெற்றிலேன் ஆயின், மையல் ஊரோ மனமாசு ஒழியாது - மயக்கங்கொண்ட ஊரவரின் மனவிருள் நீங்காது, மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்-மறுபிறப்பின்கண் மைத்துனற்கு மனைவியாகுவேன், இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே-இப்பிறப்பில் இவனொடு மணம் பொருந்தேன் என்று, நற்றாய் தனக்கு நற்றிறம் சாற்றி - தன் அன்னைக்கு நல்லியல்புகளை எடுத்துக்கூறி, மற்று அவள் கன்னிமாடத்து அடைந்த பின்-விசாகை கன்னிமாடத்திற் சேர்ந்த பின்னர்;  
       மனமாசு - திரிபான எண்ணம், மைத்துனன் - அத்தை மகன் - தருமதத்தன். தான் குமரி மூத்தலால் தாய் துன்புறாவண்ணம் அவட்கு நற்றிறம் மொழிந்தாள் என்க. நற்றிறம் - விரதமுமாம்.