சிறைசெய் காதை

       



125

மற்றவ னிவ்வூர் வந்தமை கேட்டுப்
பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து.
நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
அல்லவை கடிந்த அவன்பாற் சென்று


122
உரை
126

       இருநில வேந்தே - புலியை ஆளும் அரசே, மற்றவன் இவ்வூர் வந்தமை கேட்டு தருமதத்தன் இப்பகுதிக்கு வந்தது கேட்டு, பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து நல்லாள் நாணாள்- பொன்வளையுடைய விசாகையாகிய நல்லாளும் நாணாது மனையின் புறத்தே வந்து, பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பாற் சென்று - பலர் நடுவே தீயனவற்றை நீங்கிய அவ்வணிகனிடம் சென்று ;
  
       இருநில வேந்து - சோழ மன்னன்: மாதவர் இங்ஙனம் விளித துரைக்கின்றனர். அவன் பலர் சூழ இருந்தமையின் பல்லோர் நாப்பண் அவன்பாற் சென்று என்றார். அல்லவை - பொய் முதலிய தீமைகள்.