சிறைசெய் காதை

       

155

ஏறிய செங்கை யிழிந்தில திந்தக்
காரிகை பொருட்டெனக் ககந்தன் கேட்டு
கடுஞ்சினந் திருகி மகன்றுயர் நோக்கான்
மைந்தன் றன்னை வாளா லெறிந்தனன்


155
உரை
158

       ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு எனக் ககந்தன் கேட்டு-விசாகைக்குச் சூட்டுதற் பொருட்டு மாலை வாங்குவதற்கு ஏறிய கை மீட்டும் இறங்கவில்லை என்பதைக் ககந்தன் கேள்வியுற்று, கடுஞ்சினம் திருகி - கடிய சினம் மிக்கு, மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் - மகன் இறக்கும் துன்பத்தை நோக்காதவனாய் அவனை வாளால் வெட்டினான் ; நோக்கான் : நோக்கல் நோக்கம்.