சிறைவிடு காதை

       




20

தன்மண் காத்தன்று பிறர்மண் கொண்டன்று
என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது
மன்பதை காக்கு மன்னவன் றன்முன்
துன்பங் கொள்ளே லென்றவள் போயபின்

17
உரை
20

       தன் மண்காத்தன்று பிறர் மண்கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது-நின் புதல்வ னிறந்தது தன் நிலத்தைக் காத்தமையாலன்று பகைவர் நிலத்தைக் கொண்டமையாலுமன்று காமத்தால் நிகழ்ந்த அவ்விறப்பு யாதென்று கூறப்படும், மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பங் கொள்ளேல் என்று அவள் போயபின் - உயிர்ப் பன்மைகளைக் காக்கின்ற அரசன் முன்னர்த் துன்பம் கொள்ளாதே என வுரைத்து வாசந்தவை சென்றபின்னர் ;

       காமத்தால் என்பது வருவித்துரைக்கப்பட்டது. எனனெனப்படும --எத்தகையதென்று கூறப்படும்; இக்குடிப் பிறந்தோர்க்கு ஏலாத இழிவுடைய தென்றபடி. அவள் துன்புறுதல் அரசற்கு வருத்தத்தைச் செய்யுமாகலின் 'மன்பதை காக்கு மன்னவன்றன்முன், துன்பங் கொள்ளேல்' என்றாள்.