சிறைவிடு காதை

       
சிறப்பின் பாலார் மக்க ளல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க் கென்பது
அறிந்தனை யாயினிவ் வாயிழை தன்னைச்
செறிந்த சிறைநோய் தீர்க்கென் றிறைசொல

31
உரை
34

       சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது - அரசர்கட்கு அறிவொழுக்கம் முதலிய சிறப்பியல்புகளை யுடையவரே புதல்வர் ஆவர் அல்லாதார் மறத்தற்குரியர் என்பதனை, அறிந்தனை ஆயின்-உணர்ந்தனை யானால், இவ் ஆயிழை தன்னை - இந் நங்கையை, செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல - நெருங்கிய சிறைத் ன்பத்தினின்றும் நீக்குவாயாக என்று அரசன் கூற ;

       மறப்பின் பாலார்-புதல்வரல்ல ரென மறக்கும் பகுதியின ரென்க. என்பது-என்னுமுண்மையை. நீயே அறிந்தனையாயின் தீர்க்கவென்று சொல்ல வென்க.