சிறைவிடு காதை

       
35 என்னோ டிருப்பினு மிருக்கஇவ் விளங்கொடி
தன்னோ டெடுப்பினுந் தகைக்குந ரில்லென்று
அங்கவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு
கொங்கவிழ் குழலாள் கோயிலுட் புக்காங்கு

35
உரை
38

       என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்லென்று - இவ்விளங்கொடி போல்வாள் என்னுடன் இருப்பினும் இருக்க அன்றித் தனக்குரிய ஓட்டினை ஏந்திப் பிச்சைக்குச் செல்லினும் தடுப்பவர் இல்லை என்று, அங்கவள்தனைக் கூஉய் - மணிமேகலையை அழைத்து, அவள் தன்னோடு - அவளுடன், கொங்கு அவிழ் குழலாள் கோயிலுட் புக்கு - மணம் விரியும் கூந்தலையுடைய இராசமாதேவி அரண்மனையுட் புகுந்து ;