சிறைவிடு காதை

       


45
கல்லா விளைஞ னொருவனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமே கலைதன்
இணைவள ரிளமுலை யேந்தெழி லாகத்துப்
புணர்குறி செய்து பொருந்தின ளென்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்குரை யென்றே
காணம் பலவுங் கைநிறை கொடுப்ப

43
உரை
48

       கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் - கல்வி யில்லாத இளைஞன் ஒருவனை அழைத்து, வல்லாங்குச் செய்து-வல்லமை செய்து, மணிமேகலை தன் இணைவளர் இளமுலை-மணிமேகலை தன் இளங்க கொங்கைகள், ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்-எனது மிக்க அழகினையுடைய மார்பின்கண பொருந்தும் குறியினைச் செய்து கூடினள் என்னும், பான்மைச் கட்டுரை பலர்க்கு உரை என்றே-முறைமையுடைய கட்டுரையைப் பலர்க்கும் கூறுவாயாக என்று, காணம் பலவும் கைநிறை கொடுப்ப - பொற்காசுகள் பலவற்றைக் கைநிறையக் கொடுக்க ;

       
அரசன் றேவி கூஉய் உரை யென்று கொடுப்ப வென்க. வல்லாங்கு-வல்லமை ; 1"வல்லாங்கு வாழ்து மென்னாது" என்பது காண்க. நிறைய என்பது நிறை என விகாரமாயிற்று.

1 புறம். 163.