ஆபுத்திரனாடு அடைந்த காதை


20




25
பூவிலை யீத்தவன் பொன்றின னென்று
மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் பரந்துபடு மனைதொறும் பாத்திர மேந்தி
அரங்கக் கூத்திசென் றையங் கொண்டதும்
நகுத லல்லது நாடகக் கணிகையர்
தகுதி யென்னார் தன்மை யன்மையின்
மன்னவன் மகனே யன்றியு மாதரால்
இந்நக ருறூஉ மிதுக்கணு முண்டால்

19
உரை
26

       பூவிலே ஈத்தவன் பொன்றினன் என்று - அற்றைப் பரிசமளித்த கோவலன் இறந்தனன் என்று, மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி அறவணவடிகள் உறையுளிற் புக்கதும், பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக்கூத்தி சென்று ஐயங் கொண்டதும் - மணிமேகலை பாத்திரத்தை ஏந்திப் பரவித் தோன்றும் இல்லங்கள்தோறும் சென்று பிச்சை ஏற்றதும், நகுதல் அல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை அன்மையின் - பரிகசித்தற்குக் காரணமாவனவேயன்றி நாடக மகளிரின் இயல்பன்மையால் அவர்க்குத் தகுதி என்று கூறார், மன்னவன் மகனே அன்றியும் மாதரால் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் - உதயகுமரனுக்கு நேர்ந்த இடுக்கணே யன்றியும் மணிமே கலையால் இம்முதுநக ரடையும் துன்பமும் உண்டு ;

       ஈண்டுக் கூறிய நூற்றிருபத் தொருவரும் காவிரிப்பூம்பட்டினத் பூவிலை - பூவிற்கு விலை ; அற்றைப் பரிசம் என்பர் : 1 "பூவிலை மடந்தையர்" என்பதன் உரை காண்க. மாதவர் பள்ளியுளடைந்தது என்றதனால் துறவு பூண்டமை பெற்றாம். அரங்கக்கூத்தி - மணிமேகலை; அரங்கிலே கூத்தியற்றுதற்குரியவள் என்றபடி.
1 சிலப். 5 : 51.