ஆபுத்திரனாடு அடைந்த காதை


160




165


வெந்தாறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த
அந்தி மாலை யாயிழை போகி
உலக வறவியு முதியாள் குடிகையும்
இலகொளிக் கந்தமு மேத்தி வலங்கொண்டு
அந்தர மாறாப் பறந்துசென் றாயிழை
இந்திரன் மருமா னிரும்பதிப் புறத்தோர்
பூம்பொழி லகவயி னிழிந்து பொறையுயிர்த்து
ஆங்குவாழ் மாதவ னடியிணை வணங்கி
இந்நகர்ப் போயா திந்நக ராளும்
மன்னவன் யாரென மாதவன் கூறும்

156
உரை
168

       வெந்து ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-வெந்து ஆறியபொன்னைப்போல் வீழ்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு மறைந்த அந்திப்பொழுதில் மணிமேகலை அங்கு நின்றுஞ் சென்று, உலக வறவியும் முதியாள் குடிகையும் - உலக வறவியையும் சம்பாபதி கோயிலையும், இலகொளிக் கந்தமும் ஏத்தி வலங்கொண்டு - விளங்குகின்ற ஒளியினையுடைய கந்திற் பாவையையும் துதித்து வலங்கொண்டு, அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆயிழை-இளங்கொடி விசும்பேவழியாகப் பறந்துசென்று, இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்து-இந்திரன் வழித்தோன்ற லாகிய புண்ணியராசனது பெரிய நகரத்தின். புறத்தில், ஓர் பூம் பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து - ஒரு பூஞ்சோலை யின் உள்ளிடத்தில் இறங்கி இளைப்பாறி, ஆங்கு வாழ் மாதவன் அடியிணை வணங்கி - ஆண்டுறையும் அருந்தவனாகிய தருமசாவகன் திருவடிகளை வணக்கஞ் செய்து, இந்நகர்ப் பேர் யாது இந்நகர் ஆளும் மன்னவன் யார் என - இந் நகரத்தின் பெயர் யாது இப் பதியை ஆளும் அரசன் யாவன் என வினவ ;

       அந்திப்பொழுதின் செக்கர் வானத்திற்குத் தீயில் வெந்து ஆறிய பொன் உவமம்; 1 "வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப" என்பதுங் காண்க. மருமான் - வழித்தோன்றல்.

1 அகம்: 71.