ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை



60




65

முற்ற வுணர்ந்த முதல்வனை யல்லது
மற்றப் பீடீகை தன்மிசைப் பொறாஅது
பீடிகை பொறுத்த பின்ன ரல்லது
வானவன் வணங்கான் மற்றவ் வானவன்
பெருமகற் கமைத்துப் பிறந்தார் பிறவியைத்
தரும பீடிகை சாற்றுக வென்றே
அருளின னாதலி னாயிழை பிறவியும்
இருளறக் காட்டு மென்றெடுத் துரைத்தது
அன்றே போன்ற தருந்தவர் வாய்மொழி
இன்றெனக் கென்றே யேத்தி வலங்கொண்டு
ஈங்கிவ ளன்னண மாக விறைவனும்


58
உரை
68

       . முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது - எல்லா மறிந்த இறைவனையன்றி, மற்று அப்பீடிகை தன்மிசைப் பொறாஅது - வேறெவரையும் அப்பீடிகை தன்மீது தாங்காது, பீடிகை பொறுத்தபின்னர் அல்லது-அப்பீடம் அறவோன் அடியிணையைத் தாங்கியபின்னரேயன்றி, வானவன் வணங்கான்-இந்திரன் அதனை வணங்கான், மற்று அவ்வானவன்-அவ்விண்ணவன், பெருமகற்கு. அமைத்து-புத்தனை அறிந்து கொள்ளும்பொருட்டு இயற்றி, பிறந்தார் பிறவியை - பிறந்தோர்களுடைய பழம்பிறப்பின் செய்தியை, தரும பீடிகை சாற்றுக என்றே அருளினன் ஆதலின் - இத் தரும பீடிகை உணர்த்துக என ஆணைதந்தனன் ஆதலின், ஆயிழை பிறவியும் இருளறக்காட்டும் என்று எடுத்து உரைந்து-நின் பிறவியினையும் மயக்கமறக்காட்டும் என்று எடுத்துக் கூறியதாகிய, அன்றே போன்றது அருந்தவர் வாய்மொழி இன்று எனக்கு என்றே ஏத்தி வலங்கொண்டு-அன்றுரைத்த நுமது வாய்மொழி எனக்கு இன்று கூறினாற்போன்றது என்று துதித்து வலங்கொண்டு, ஈங்கிவள் இன்னணம் ஆக - இவ்விடத்து மணிமேகலை இப்படியிருக்க;
   
       பெருமகற்கு அமைத்து - பெருமகன் எழுந்தருளுதற் பொருட்டமைத்து என்றுமாம். ஆயிழை, அருந்தவர் என்பன முன்னிலக்கண் வந்தன. உரைத்ததாகிய வாய்மொழி யென்க. வாய்மொழி இன்று எனக்கு அன்று நேரிலே கேட்டாற் போன்றது என்றுரைத்தலுமாம்