ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை

105




110

காய்வெங் கோடையிற் கார்தோன் றியதென
நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல்
தோன்றிய பின்னர்த் தோன்றிய வுயிர்கட்கு
வானம் பொய்யாது மண்வளம் பிழையாது
ஊனுடை யுயிர்க ளுறுபசி யறியா
நீயொழி காலை நின்னா டெல்லாம்
தாயொழி குழவி போலக் கூஉம


105
உரை
111

       காய் வெங் கோடையில் கார் தோன்றியது என - எரிகின்ற வெப்பமிகுந்த கோடையில் கருமுகில் தோன்றினாற் போல, நீ தோன்றினையே நிரைத்தார் அண்ணல்-வரிசைப் படுத்திய மலர் மாலையினையணிந்த பெருந்தகாய் நீ தோன்றினையே, தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு-நீ உதித்த பின் உலகில் உள்ள உயிர்களுக்கு, வானம் பொய்யது மண்வளம் பிழையாது - மழை பெய்தலிற் பொய்யாமையின் நிலவளம் பிழையாதாயிற்று, ஊனுடை உயிர்கள் உறுபசி அறியா-ஊனுடம்பினையுடைய உயிர்கள் மிக்க பசியை அறியாவாயின ஆகலின், நீயொழிகாலை நின்னாடு எல்லாம் தாயொழி குழவிபோலக் கூஉம்-நீ நீங்கிய காலத்துநினது நாடு முழுவதும் தாயற்ற சிறு குழந்தையைப்போல வாய்விட்ட ழைக்கும்;

       செங்கோன் மன்னன் குடிகளுக்குத் தாய்போல்வான் என்பது 1" தாயொக்கும் அன்பின்" என்பதனானு மறிக. "தாயொழி குழவி போலக் கூ.உம்' என்னுங் கருத்து 2 "தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூ.உம்" என்பதனோ டொத்திருத்தலுங் காண்க.

1 கம்ப. பால. அரசியல். 4. 2 புறம். 4.