ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை



180

நாக நன்னா டாள்வோன் றன்மகள்
பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள்
பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய
புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித்
தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட
மாபெரும் பீடிகை வலங்கொண் டோத்துழிக்


178
உரை
183

       நாகநன்னாடு ஆள்வோன்தன் மகள் பீலிவளையென்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாகநன்னாட் டரசன் புதல்வியாகிய மகளிருள் எழில் மிகுந்தோளாய பீலிவளை என்பவள், பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய - ஞாயிற்றுப் புத்தேள் மரபில் உதித்த, புனிற்றிளங் குழவியோடு பூங்கொடி பொருந்தி - மிக்க இளமையுடைய குழவியுடன் அவளும் வந்து, இத் தீவகம் வலஞ்செய்து - இத் தீவினை வலம் வந்து, தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலங்கொண்டு ஏத்துழி-இந்திரனா லிடப்பட்ட பெருமை பொருந்திய இவ் வறத் தவிசினை வலஞ்செய்து துதிக்கும்பொழுது;

       ஆள்வோன் - வளைவணன். பீலிவளை யென்பாளாகிய பூங்கொடிகுழவியொடு பொருந்தி யென்க.