சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

70
கண்டுண ராமை 1 கடுமாப் புலியொன்று
அண்டலை முதலிய கண்டுமறி யாமை

69
உரை
70

       கண்டுணராமை - கண்டுணராமையென்னும் பிரமாணாபாசமாவது, கடுமாப் புலியொன்று அண்டல் முதலிய - கடிய விலங்காகிய புலியொன்று நெருங்குதல் முதலியவற்றை, கண்டும் - நேரிற் கண்டுவைத்தும், அறியாமை - தம்மைப் பாதுகாவாமைக் கேதுவாகிய அறிவறியாமையாம் எ - று.

       இரை விழுங்கி யுறங்கும் மாசுணம் எரியாற் சூழப்படினும் இடம் பெயராது கிடத்தல் போல, புலி முதலிய தீங்கு செய்யும் விலங்குகள் நெருங்கி வருதலை யறிந்துவைத்தும் தம்மைப் பாதுகாவாமைக்கு ஏதுவாகிய நல்லறிவின்மை, ஈண்டுக் "கண்டுணராமை" எனப்பட்டது. அறியாமை, அறிந்து பாதுகாத்தலைச் செய்யாமை. இதனை உலகோர் "அலட்சிய புத்தி" யென்றும், அளவை நூலோர், "உபேட்சாத்மக ஞானம்" என்றும் வழங்குவர். அண்டலை யென்புழி ஐ: சாரியை அண்டல், அணுகுதல்; "துயரங்கள் அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை" (ஞானசம். 197-1) என்புழிப்போல.

1 கடுமருப்புலியி லோர்ந்து.