சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதின னாரணன் காப்பென் றுரைத்தனன்

98
உரை
99

[ வைணவவாதி ]
       கடல்வணன் புராணம்-கடலின் நிறத்தை யுடையனாகிய விட்டுணு புராணத்தை, காதல் கொண்டு ஓதினன் - அன்போடு ஓதிப் பயின்றவனாகிய வைணவ வாதி, நாரணன் காப்பு என்று உரைத்தனன் -தங்கட்கு நாராயணனே இறைவன் என்று மணிமேகலைக்குச் சொனனான் எ - று.

       காதல் கொண்டோதினன் எனவே, இவன் வைணவ சமயத்திற் பேரன்பும் கடைப்பீடியும் உடையனென்பது பெற்றாம். முறை செய்தலே யன்றிக் காத்தலும் இறைவன் கடனாகும் இயைபுபற்றி, இறையென்பதற்குக் "காப்பு" என்றான். புராணம்: பழமையான வரலாறு. து.