சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       



155

பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
என்றிவ் வாறு பிறப்பினு மேவிப்
பண்புறு வரிசையிற் பாற்பட்டுப் பிறந்தோர்
1கழிவெண் பிறப்பிற் கலந்துவீ
டணைகுவர்
அழியல் வேண்டா ரதுவுறற் பாலார்
இதுசெம் போக்கி னியல்பிது தப்பும்
அதுமண் டலமென் றறியல் வேண்டும்

150
உரை
158

       கரும்ம் பிறப்பும் கருநீலப்பிறப்பும் - கரும்பிறப்பென்றும் கருநீலப் பிறப்பென்றும்; பசும்ம் பிறப்பும் - பசும் பிறப்பென்றும்; செம்ம் பிறப்பும் - செம்மைப் பிறப்பென்றும்; பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பு மென்று - பொன்மைப் பிறப்பென்றும் வெண்மைப் பிறப்பென்றும்; இவ்வாறு பிறப்பினும் மேவி-இவ்வறுகைப் பிறப்புக்களிலும் பிறந்து; கழிவெண் பிறப்பிற் கலந்து - முடிவில் மிக வெண்மையான பிறப்பிற் பிறந்து வீடுபேறெய்துவர் மக்கள்; அழியல் வேண்டார் - துன்பத்தை விரும்பாதோர்; அது உறற் பாலர்-அவ்வீடு பேற்றிற் குரிய கழிவெண் பிறப்பெய்தும்பான்மை யுடையோராவர்; இது செம் போக்கின் இயல்-இவ்வாறு முறையே பிறந்து வீடெய்தும் நெறி செம்போக் கெனப்படும் நன்னெறி யாம்; இது தப்புமது மண்டலம் என்று அறியல் வேண்டும் - இந் நெறியிற்றவறித் துன்புறுவது மண்டல நெறி யென்று அறிய வேண்டும் எ - று.

       வீடு பேற்றுக்குரிய முயற்சியுடையோர் முறையே கரும்பிறப்பு முதலிய அறுவகைப் பிறப்பும் பிறந்து படிப்படியாக வுயர்ந்து கழிவெண் பிறப்புற்று வீடுபேறடைவர்என்பதாம். இதனைப்பிறரும் "வெண்மைநன் பொன்மை செம்மை கழிவெண்மை நீலம் பச்சை, யுண்மை யிவ்வா றினுள்ளும் கழிவெண்மை யோங்கு வீட்டின், வண்மைய தாகச் சேரு மற்றிவை யுருவம் பற்றி, யுண்மையவ் வெட்டுத் தீட்டுக்கலப்பினி லுணரு மென்றான்" (சிவ. சித். பர. ஆசீவ. 8) என்றார். இவ்வாறு பல்வகைப் பிறப்புக்கட்கும் நிறங்கூறும் இயல்பு சீவக சிந்தாமணி முதலிய சமணூல்களிலும் காணப்படுகிறது. பெரியாழ்வாரும் முத்திப் பேற்றுக் குரியராயினாரை "வெள்ளுயிர்" (திருப்பல்லா.) என்று கூறுகின்றார். செம்போக்கு, நேரியசெலவு; பிறப்புவகையில் மேனோக்கிச் செல்லாது கீழ்ப்பட்டுச் சுழலுவதுபற்றி, பிற்போக்கினை "மண்டிலம்" என்றார்.

1(பாடம்) வேற்றியலெய்தும்.