சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       


இயற்றி யப்பய றழிதலு மேதுத்
தருமாத்தி காயந் தானெங்கு முளதாய்ப்


186
உரை
187

       ஏது-உலகு உயிர் கட்கு வீடு முதலியவற்றிற்கேதுவாகிய, தன்மாத்தி காயம்-தன்மாத்திகாயமாவது, தான் எங்கும் உளதாய்-தான் எல்லாப் பொருளிடத்தும் எப்போதும் உளதாகி, பொருள்களைப் பொருந்த நடத்தும் - வினை முதலிய பொருள்களை உயிர்கள் பொருந்தி யியங்குமாறு செய்யும் எ - று.

       எனவே, உயிர்கட்குக் கட்டுநீங்கி வீடுபெறுதற்குத் தருமாத்திகாயம் ஏதுவென்றும், இயங்கியற் பொருள்களின் இயக்கத்துக்கும் இதுவே ஏதுவென்றும் கூறியவாறாம். தருமாத்திகாயமும் மேல்வரும் அதருமாத்திகாயமும் இல்வழி, உலகும் உயிரும் கட்டும் வீடும் இலவாமென்பதை, "அளவதாம்பொருளுலகத்துக் கில்லையேல், அளவிலா காயத்திலணுக்களோடுயிய், அளவளா வின்றியே யகன்று போயபின், உளவல கட்டுவீடுலகத் தோடுமே" 89) என்றுமேருமந்தர புராணம் கூறுவது காண்க.