சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

245

ஆமாறு கூறா மதிற்பொரு ளென்பது
குணமுந் தொழிலு முடைத்தா யெத்தொகைப்


244
உரை
245

        அதிற் பொருள் என்பது-அப்பொருட் கூறுபாட்டில் ஒன்றாகிய பொருளெனப்படுவது; குணமும் தொழிலும் உடைத்தாய்-குணஞ் செயல்களையுடையதாய்; எத்தொகைப் பொருளுக்கும் ஏதுவாம் - தொகுதிப் பொருள்வகை யெல்லாவற்றிற்கும் காரணமாம் எ - று.

குணஞ்செயல்களின் வேறாய் அவற்றை யவாவி நிற்பதும் எவ்வகைத் தொகுதிப் பொருட்கும் காரணமாய் நிற்பதும் பொருளென்றவாறு. இவற்றின் இயல்பை நித்தியம், அநாசிருதம், அந்தியவிசேடமென மூன்று வகையாகப் பகுத்துக் கூறுவதுமுண்டு. முதலும் சார்புமெனக் கொண்டு, முதற்பொருள் நித்தமெனவும், சார்பெல்லாம் அழிதன்மாலைய வென்றும் கூறுப. சார்பு, அவயவி திரவியம் எனப்படும்.