சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       



255

ஓசை யூறு நிறநாற் றஞ்சுவை
மாசில் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
என்னு நீர்மை பக்கமுத லனேகம்
கண்ணிய பொருளின் குணங்க ளாகும்


252
உரை
256

        ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை - ஓசையும் பரிசும் நிறமும் நாற்றமும் சுவையும் என்பனவும்; மாசில் பெருமை சிறுமை வன்னை மென்னை சீர்மை நொய்மை வடிவம் என்னும் நீர்மை - குற்றமில்லாத பெருமையும் சிறுமையும் வன்னையும் மென்னையும் சீர்மையும் நொய்ம்மையும் வடிவமும் எனப்படும் பண்புகளும்; பக்கம் முதல் அநேகம் - இடம் வலம் என்ற பக்கம் மேன்மை கீழ்மை முன்மை பின்மை முதலிய பலவும்; கண்ணிய பொருளின் குணங்களாகும்-சொல்லப்பட்ட பொருள்களின் குணங்களாகும் எ - று.

       
ஓசை முதலியனவும் பெருனை முதலியனவும் பக்கம் முதலியனவும் குணமென ஒன்றாயடங்குமாயினும், சிற்சில வேறுபாடுடைமை பற்றி, இவற்றைப் பகுத்து "மாசில்" என்றும், "என்னும் நீர்மை" யென்றும் சிறப்பித்துரைத்தார். இனி, குணமாவது, "பிறிதொரு

       
பொருளைப்பற்றி நின்று, தான் பிறிதொரு குணத்தை யேலாது, தன்னையுடைய குணப்பொருட்கு ஏதுவாதலும், அதன் யோக விபாகங்களால் திரிதலுமில்லது," என்று கணாதர் (வை. சூ. i. 1. 16) கூறுகின்றார். இக்கூறிய குணங்களுள் ஓசையாவது ஆகாயத்தன் குணம். ஊறென்பது நிலம் நீர் காற்று என்ற மூன்றன் குணமாம்; இது உடலின் தோலால் உணரப்படும். நிறமென்பது, நிலம் நீர் ஒளியென்ற மூன்றன் குணமாகும்; இந்நிறம் வெண்மை நீலம் பொன்மை செம்மை பசுமை கபிலம் சித்திரம் என எழுவகைப்படும். நாற்றமாவது, நிலத்தின் குணமாய் மூக்கால் உற்றறியப்படுவதாம் ; இது நறு நாற்றம் தீ நாற்றமென விருவகைத்து. சுவை யென்பது, நிலம் நீர் என்ற இரண்டின் குணமாய் நாவால் உணரப்படுவதாம். குண வகைகளுள் ஒசையொழித்த நான்குடன் "சங்கியை, பரிமாணம், பிரதக்துவம், சம்யோகம், விபாகம், பரத்துவம், அபரத்துவம், புத்தி, சுகம், துக்கம், இச்சை, துவேஷம், பிரயத்னம்" என்ற பதின்மூன்றையுங் கூட்டிப் பிதினேழாக வைசேடிக சூத்திரம் (i. 1. 6) கூறுகிறது; பதார்த்த தர்ம சங்கிரகம் என்னும் நூல், அப்பதினேழுடன், "குருத்வம், திரவத்வம், சிநேகம், தருமம், அதருமம், சத்தம், சம்ஸ்காரம்' (பக். 10) என்ற ஏழையுங்கூட்டி இருபத்துநான்காகக் கூறும். இவற்றிக்குப் பிற்போந்த தருக்கசங்கிரக தீபிகை முதலிய நூல்கள் மேற்கூறிய குணங்கட்கு மறுதலையாயவற்றையும் கூட்டியுரைப்பனவாயின.