சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

260

போதலு நிற்றலும் பொதுக்குண மாதலிற்
சாதலு நிகழ்தலு மப்பொருட் டன்மை


259
உரை
260

        முதற் பொதுத்தான் உண்மை தரும் - முதன்மையான பொதுவாவது பொருள்களின் உண்மைத் தன்னையை யுணர்த்துவதாம் போதலும் நிற்றலும் பொதுக்குண மாதலின் - போவதும் வருவதும் எல்லாப் பொருட்கும் முதன்மையில்லாத பொதுக் குணமாதல்போல; சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்னை இறத்தலும் இருத்தலும் அவ்வப் பொருள் முதன்மையில்லாத பொதுத்தன்மையாம் எ - று.

       
எனவே, பொதுமை முதற்பொது என்றும் பொதுவென்றும் இருதிறப் படுமென்றும், உள்ளதாந்தன்மை எல்லாப் பொருட்கும் முதற் பொதுத் தன்னை யென்றும், சிலவற்றிற்கே போக்குவரவு பொது வாதல்போல இறத்தலூம் இருத்தலும் முதன்மையில்லாத பொதுத் தன்னை யென்றும் கூறியவாறு. முதற்பொதுவினைப் பரசாமானிய

        மென்றும், பொதுவினை அபரசாமானிய மென்றும் கூறுப. மரங்கட்குள்ள மரமாந்தன்னையும் குடங்கட்குள்ள குடமாந் தன்னையும் அபரசாமானியம்; மரங்கட்கும் குடங்கட்குமுள்ளஉள்ளதாந் தன்மை பரசாமானியம் என வேறுபடுத்தறியப்படும். சத்தபதார்த்தி யென்னும் நூல் மூன்றாகப் பகுத்துப் பரம் அபரம் பராபரம் என்று கூறுகிறது. இது பிற்கால வழக்கு. பரசாமானியத்தில் பொருள்களையும் அபராசாமானி யத்தில் குணஞ் செயல்களையும் அடக்கிக் கூறுவது முண்டு. குணத்துக்குக் குணமில்லாமை போலப் பொதுமைக்குப் பொதுமையில்லை.