சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

ஒன்றணி கூட்டங் குணமுங் குணியுமென்


261
உரை
261

        ஒன்று அணு - விசேடமாவது ஒன்றாகி அணுவாகும் எ - று

       
       எனவே, பல பொருட்கும் பொதுவாகிய தன்னையன்றி ஒன்றிற்கே யுள்ள சிறப்புத் தன்னை விசேடமாம் என்பதாம். அணு வொவ்வொன் றும் விசேடமாம் என்றற்கு, "ஒன்றணு" என்றார். "சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தில்" என்பதனால் அணுவைக் கூறினாரேனும், காலமும் இடமும் ஆகாசமும் ஆன்மாவும் மனமும் விசேடப் பொருளாகவே கொள்ளப்படும். அணுக்கள் அளப்பிலவாதலின், விசேடப் பொருள்களும் அளப்பில என்று சந்தபதார்த்தி யுடையார் கூறுகின்றார்.