சமயக்கணக்கர் தந் திறங்கேட்ட காதை
       

270




275

உயிரொடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும்
உயிரில் லாத வுணர்வில் பூதமும்
அவ்வப் பூத வழியவை பிறக்கும்
மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும்
உண்மைப் பொருளு முலோகாயத னுணர்வே
கண்கூ டல்லது கருத்தள வழியும்
இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே
பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்த்தல்


269
உரை
276

        உயிரொடுங் கூட்டிய உணர்வுடைப் பூதமும் - உயிர்த் தோற்றத்துக் கேதுவாக அதனோடு கூட்டப்பட்ட வுணர்வுடைய பூதக்கூறும்; உயிரில்லாத உணர்வில் பூதமும்-உடம்பினாக்கத்துக் கேதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத பூதங்கூறு மாகிய, அவை-அப்பூதக் கூறுகள்; அவ்வப்பூதவழி பிறக்கும்-அவ் வப்பூதங்களின் வழியாகவே தோன்றும்; மெய்வகை இதுவே; உண்மைநெறி இதுவே யாகும்; உரை விகற்பமுன் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே-இவற்றின் வேறாகக் கூறப் படும் பொருளும் தத்துவங்களும் உலோகாயதர் மேற்கொண்டு. கூறுவனவேயாம்; கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்-காட்சி யளவையல்லது வேறே கருத்து முதலியன நிலைபெறாமையின் கொண்டிலம்; இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே-இவ்வாழ்வும் இவ்வாழ்விற் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறப்போடே கழிவனவாம்; மறுமை உண்டாய் வினை துய்த்தல் பொய்யே என்றலும்- மறுபிறப்புண்டென்றும் ஈண்டுச் செய்யப்படும் வினைப் பயனை ஆண்டுச்சென்று நுகர்தல் வேண்டுமென்றும் கூறுவது பொய்யென்றும் பூதவாதி கூறினானாக எ - று.

       
பூதங்களில் உணர்வுடையனவும் இல்லனவுமென இருகூறுள வென்றும், உணர்வுடைய வுயிரும் அஃதில்லாத வுடம்பும் அவ்வப்பூதங்களின் கூட்டத்தால் உண்டாமென்றும் கொள்வதனால் பூதவாதிஉலகாயதரில் வேறுபடுகின்றான். பிற கருத்துள்ளவர்களில் பூதவாதியின் கொள்கை உலகாயதரின் கொள்கையொடு ஒத்ததே என்றற்கு, "வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே" என்றான். உண்மைப் பொருள் என்றது தத்துவத்தை, அச்சொற்கு அதுபொருள். நீலகேசியுடையார் காட்டும் பூதவாதத்தில், ஐந்து பூத முங்கூடி அறிவும் இன்றமும் முதலியவற்றைத் தோற்றுவிக்கும்: (858) என்று கூறப்படுகிறதே யன்றி, பூதக்கூட்டத்தை உணர்வுடைப் பூதன், உணர்வில் பூதமென்று பிரித்து இம்மணிமேகலை கூறும் கூற்றுக்கூறப் படவில்லை.