கச்சிமாநகர் புக்க காதை

       


185

மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக்
கந்திற் பாவை கட்டுரை யெல்லாம்
வாயா கின்றன வந்தித் தேத்தி
ஆய்வளை நல்லா டன்னுழைச் சென்று


184
உரை
187

       மன்னனும் விரும்பி மந்திரச் சுற்றமொடு - அரசனும் அது கேட்டு ஆவலுடன் அமைச்சர் முதலாயினோர் சூழ்வர, கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாயாகின்றன வந்தித்து ஏத்தி-கந்திற்பாவை மொழிந்த பொருளுரை யாவும் உண்மையேயாகின்றன என எண்ணி அதனை நினைத்துத் துதித்து, ஆய்வளை நல்லாள் தன்னுழைச் சென்று - அழகிய வளையணிந்த நற்றவம் பூண்ட மணிமேகலைபாற் சென்று;

       மணிமேகலையைக் காணச் செல்லும் வேந்தன் அமைச்சர் முதலாயினாருடன் சேறல் சிறப்பாதலின், ''மந்திரச் சுற்றமொடு'' என்றார் ; செய்வதும் தவிர்வதும் அவ்வப்போது தெருந்துரைப்பவ ரவராதலின். மணிமேகலை வரவை முன்னரே கந்திற்பாவை வேந்தற் குரைத்திருத்தலின், அவன் ''கட்டுரை யெல்லாம் வாயாகின்று'' என்று வியந்தான்: பன்மை யொருமை மயக்கம்.