கச்சிமாநகர் புக்க காதை

       



50

பால்வே றாக வெண்வகைப் பட்ட
கூலங் குவைஇய கூல மறுகும்

மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும்
போகம் புரக்கும் பொதுவர்பொலி மறுகும்
கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை
வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும்


48
உரை
53

       எண்வகைப்பட்ட கூலம் பால்வேறாகக் குவைஇய கூல மறுகும் எண்வகையினையுடைய கூலங்கள் வேறுவேறு பகுதி யாகக் குவிக்கப்பெற்ற தானியக் கடைத்தெருவும், மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்-அரசனிடம் நின்றேத்துவோர் இருந்தேத்து வோர் நாழிகை யிசைக்கும் வேதாளிகர் என்போர் வீதியும், போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்-இன்பத்தினை விற்கும் பொதுமகளிர் நிறைந்த வீதியும், கண்ணுழைகல்லா நுண்ணூற் கைவினை வண்ண அறுவையர் வளந்திகழ் மறுகும் - கண்களாற் காண்டற்கும் அரிதாகிய நுண்ணிய நூலினால் கைத்தொழின் மிக்குப் பலநிறங்களுடன் பொருந்திய ஆடைநெய்வோரின்வளப்ப மிக்க தெருவும்;

       கூலம் பால் வேறாகச் குவைஇய மறுகு என இயைக்க எண்வகைக் கூலமாவன "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரை யொடு கழைவிளை நெல்லே'' (சிலப். 5. 23. அடி. மேற்) இவை தனித்தனியே பகுத்துத் தொகுக்கப்பட்டிருப்பது தோன்ற, ''பால்வேறாகக் குவைஇய'' என்றார். இருந்தேத்தல் முதலியவற்றைச் செய்யும் மாகதர் மூவரையும், ''சூதர் மாகதர் வேதா ளிகரொடு'' (சிலப். 5 48.) என்று பிறரும் கூறப. போக வேட்கை மிக்குவரும் ஆடவர்க்கு அதனை நல்கி, அவர் வரம்பிகவாமைக காத்தலின், ''போகம் புரக்கும் பொதுவர்'' எனப் பொதுமகளிரைக் கூறினார். நோக்கு நுழைய மாட்டாத கைவினையும் நுண்ணூலும் பல்வகை, வண்ணமுமுடைய உடையென்பதாம்; ''நோக்கு நுழைகல்லா நுண்மைய'' (பொருந. 82.) என்று பிறரும் கூறுப. வளம், ஈண்டுப் பொன்னின்மேற்று,