ஊரலருரைத்த காதை



40

காதல னுற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து
நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன

38
உரை
41

       காதலன் உற்ற கடுந்துயர் கேட்டு - என் காதலனாகிய கோவலன் அடைந்த கொடிய துனபத்தினைக் கேள்வியுற்று, போதல் செய்யா உயிரோடு நின்றே - உடலைவிட்டு நீங்காத உயிருடன் நின்று, பொற்கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து - அழகிய கொடிகளையுடைய இத் தொன்னகரத்தாருடைய புகழுரையை இழந்து, நற்றொடி நங்காய் - நல்ல வளையல்களுடைய
வயந்தமாலையே, நாணுத் துறந்தேன் - நாணத்தையும் விட்டேன் ;

கடுந்துயர் - மிக்க துயர் ; என்றது கோவலன்

கொலையுண்டது ,் இக்காதையுள்ளே பின்னரும் (2 : 50-63) கடுந்துயர் என வருதல் காண்க. மூதூர்:ஆகுபெயர். பொருளுரை-புகழுரை. நங்காய் கேட்டு நின்று இழந்து துறந்தேன் என்றாளென்க.