தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       



75
யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது
அநித்தங் கடம்போ லென்றல் சபக்கத்
தொடர்ச்சி யாதொன் றநித்தமல் லாதது

பண்ணப் படாத தாகாசம் போலெனல்
விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழி யென்க

72
உரை
76

       சபக்கத் தொடர்ச்சி - சபக்கத் தொடர்ச்சி யென்பது; யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது-யாதொன்று செய்யப்படுவதோ; அநித்தியம் கடம்போல் என்றல்-அஃது அநித்தமாகும் குடம் போல் என்று சொல்லுவதாம்; யாதொன்று அநித்தமல்லாதது பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல்-யாது அநித்தமல்லாததோ அது செய்யப்படாததாம் ஆகாயம் போல என்று மறு தலைப்பக்கமாக நின்று சொல்லுவது; விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க - விபக்கத் தொடர்ச்சி யென்னும் மீட்சிமொழி யென்று அறிக எ - று.

         பக்க தன்மமாகிய பண்ணப்படுதலா லென்பதையே தொடர்ந்து பக்கப் பொருளாக நிறுத்தி மேலே சாதித்த அநித்தத்துவத்தை வற்புறுத்துதவது பற்றிச் "சபக்கத் தொடர்ச்சி" யென்றும் சாதிக்கப்பட்ட பொருட்கு மறுதலைப் பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி மறுதலை யேதுவால் ஏற்ற திட்டாந்தங் காட்டிச் சாதித்தலின், "விபக்கத் தொடர்ச்சி" யென்றும், அவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க வசனத்தின் மறுதலை யாதலின் "மீட்சி மொழி"யென்றும் கூறினார். சபக்கம்-தன்பக்கம். இதன் மறுதலை விபக்கம். திக்க நாகர் சபக்கத் தொடர்ச்சியை, சபக்கானுகம வசன மென்றும், விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியை வெதிரேக வசன மென்றும் உரைக்கின்றார்.