தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       


305




310




315
தன்மிச் சொரூப விபரீத சாதனந்
தன்மி யுடைய சொரூபாத் திரத்தினை

ஏதுத் தானே விபரீதப் படுத்தல்
பாவந் திரவியங் கன்ம மன்று
குணமு மன்றெத் திரவிய மாமெக்
குணகன் மத்துண் மையின்வே றாதலாற்
சாமா னியவிசே டம்போ லென்றாற்

பொருளுங் குணமுங் கருமமு மொன்றாய்
நின்றவற் றின்னிடை யுண்மைவே றாதலா லென்று
காட்டப் பட்ட வேது மூன்றினுடை
உண்மை வேறு படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத் தில்லா மையினுந்

திட்டாந் தத்திற் சாமானியம் விசேடம்
போக்கிய பிறிதொன் றில்லாமை யானும்
பாவ மென்று பகர்ந்ததன் மியினை
அபாவ மாக்குத லான்விப ரீதந்


303
உரை
318

       தன்மிச் சொரூப விபரீத சாதனம் - தன்மிச் சொரூப விபரீத சாதனமெனப்படும் விருத்த வேதுப் போலியாவது; தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை - வாதியாற் கூறப்படும் தன்மியின் சிறப்பியல்பை ; ஏதுத்தானே - அவன் கூறும் ஏதுவே ; விபரீதப்படுத்தல்-விருத்தமாக்கி விடுவது; பாவம் திரவியம் அன்று கண்மமன்று குணமுமன்றாம் - பாவம் திரவியம் குணம் கன்மம் என்பவற்றுள் ஒன்றுமன்று ; எத்திரவியம் எக்குணம் கன்மத்து உண்மையின் வேறாதலால் - எல்லாப் பொருள் குணம் தொழில் களிலுமுள்ள உண்மைத் தன்மையின் வேறாய்ப் பொதுவாய வுண்மைத் தன்மையுடைமையால்; சாமானிய விசேடம் போல் - சாமானியமும் விசேடமும் போல ; என்றால் - என்று வைசேடிக வாதி யொருவன் சொன்னால்; பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் நின்றவற்றினிடை யுண்மை வேறாதலால்-பொருள் குணந்தொழி லென ஒருங்கு நின்றவற்றின் கண்ணுள்ள உண்மைத் தன்மையின் வேறாகப் பொதுவுண்மைத் தன்மையுடைமையால் ; என்று காட்டப்பட்ட வேது - என்று வாதியாற் கூறப்பட்ட ஏதுவின்கண் ; மூன்றினுடை யுண்மை வேறுபடுத்தும் பொதுவாமுண்மை - மூன்றின் கண்ணுமுள்ள உண்மைத் தன்மையின் வேறுபட்டு நிற்கும் பொதுவாம் உண்மைத் தன்மை; சாத்தியத்து இல்லாமையினும் - சாதிக்கப்படும் பக்க தன்மியாகிய பாவத்தின்கண் இல்லாமையானும் ; திடடாந்தத்தில்-திட்டாந்தத்தின் கூறப்பட்ட; சாமானிய விசேட போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும் - பொதுவுஞ 1 இச்சாங்கிய வாதம் சாங்கிய காரிகை (காரிகை 17) யிலும் சுலோக வார்த்திகத்திலும், (அனுமானபரி. 96-107) நியாய ரத்னாகரத்திலும், சாந்த ரஷிதருடைய தத்துவ சங்கிரகத்திலும் (vii 307-10) காணப்படுகிறது சிறப்புமாகிய இயல்புடைய பொருள்களும் ஒன்றில்வழிப் பிறி தொன்றில்லை யாதலானும் ; பாவம் என்று பகர்ந்த தன்மியினை - பாவமென்று பக்க வசனத்துள் எடுத்தோடப்பட்ட தன்மியின் சொரூப வியல்பைக் கெடுத்து ; அபாவமாக்குதலால் - அபாவமெனச் சாதித்து விடுதலால் ; விபரீதம் - விருத்தப் போலியாயிற்று எ - று.

          ஆமென்பதனை அன்றென்பதனோடும், அன்றென்பதைத் திரவியத் தோடும் ஒட்டி, திரவியமன்றாம், கன்மமன்றாம், குணமுமன்றாமென இயைத்துக்கொள்க. எத்திரவியத்தும் எக்குண எக்கன்மத்தும் எனற் பாலன் எத்திரவிய மெக்குண கன்மத்தென நின்றன. எல்லாத் திரவிய குண கன்மங்களிலும் உள்ள பாவத்தின் வேறாதலால் என்பான், பாவத்தை உண்மையென்பதுபற்றி, "உண்மையின் வேறாதலால்" என்றான். சாமானிய விசேடம்போல் என்பது திட்டாந்தம். மூன்றினுடை உண்மையாவது திரவியம் முதலிய மூன்றின்கண்ணுமுள்ள பாவம். இதனை வேறுபடுத்தும் பொதுவாமுண்மை பாவ பதார்த்த மாறினுள்ளும் அமைந்து கிடக்கும் பாவம். சொரூபம் ஈண்டுத் தன்மத்தின் மேற்று. "உண்மை யேதுபடுத்தும்" என்பது "உண்மையின் வேறாதலால்" என்றதனோடு பொருந்தாமையின், "வேறு படுத்தும்" எனத் திருத்திக் கொள்ளப்பட்டது ; திரு. நாராயணையங்கார் "வேறு படுத்துப் பொதுவாமுண்மை" எனத் திருத்திக் கொள்வர். இனி, இவ்வாறு திருத்திக் கொள்ளாது "உண்மை பேதுப் படுத்தும்" என்ற பாடத்தைக்கொண்டு, பேதம்பேது என நின்றதாகக் கோடலுமமையும்.

       
 திரவியம் குணம் கன்மம் சாமானியம் விசேடம் சமவாயம் என்ற ஆறனையும் பாவ பதார்த்தமென்றும், திரவிய முதலிய மூன்றனையும் சத்துவ சம்பந்தமென்றும், ஏனை மூன்றனையும் சுவான்ம சத்துவமென்றும், இவ்விருகையினும் இயைந்திருக்கும் பாவத்தைப் பரமசத்தென்றும் வைசேடிகர் கூறுவர்.

         சாமானிய முதலியமூன்றும்பாவபதார்த்தங்களேயாயினும், திரவிய முதலியவற்றைப்போல் இடம்பொருள் காலங்களில் வைத்துணரப்படுவனவல்ல ; அவை "புத்தியபேஷம்" எனப்படும். அதனால், "பாவம் திரவியமன்று கன்மமுமன்று" என்று பக்க வசனமும் திரவிய குண கன்மங்களது "உண்மையின் வேறாதலால்" எனப் பக்க தன்ம வசனமும் கூறினான். விசேடத்தின்கண் சாமானியம் உளதாயினும், விசேடத் துண்மையின் சாமானியத்துண்மை வேறாதல்போல என எடுத்துக் காட்டுவான். சாமானிய விசேடம் போல் என்றான். இது வைசேடிகனாகிய வாதி கூற்று. இவ்வைசேடிகன் கூறிய ஏது தன்மிச்சொரூப விபரீத சாதனமென வுரைத்து மறுக்கும் பிரதிவாதி, இவ்வேது, "சாத்தியத்தில்லாமையானும், திட்டாந்தத்திற் சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்றில்லாமையானும் பாவமென்று பகர்ந்த் தன்மியினை அபாவமாக்குதலான் விபரீதம்" என்றுரைக்கின்றான். திரவிய முதலிய மூன்றினிடத்து உள்ள உண்மையின் வேறுபடுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியமாகிய பாவத்தின்கண் இல்லையென்பான், "சாத்தியத்தில்லாமையினும்" என்றும் திட்டாந்தமாகக் காட்டப்படும் சாமானிய விசேடங்களுள், சாமானியமில்வழி விசேடப்பொருளும் விசேடமில்வழிச் சாமானியப் பொருளும், இரண்டுமில்வழி எப்பொருளும் இல்லையா யொழிதலால், "சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்றில்லாமையானும்" என்றும் இதனால் தன்மியாகிய பாவத்துக்குச் சொரூபமாகிய திரவியகுண கன்மமன்மை இல்லையாய்ப் பாவமென்ப தொன்றில்லை யென்பதுபட நிற்றல்பற்றி, "பகர்ந்த தன்மியினை அபாவமாக்குதலான் விபரீத" மென்றும் கூறி மறுக்கின்றான்.

         இனி, இதற்கு நியாயப்பிரவேசமுடையார் காட்டும்காரணமும்கருத்துரையும் வேறாதலை யறிந்து கொள்க. குமரிலபட்டர் இதனை, தர்மிச் சொரூப பாதையென்று பெயரிட்டு, "சமவாயம் பொருளன்று குண மன்று தொழிலுமன்று, பொருளுண்மை யுணர்வுக்கு இடனாதலால், இங்கே கடமுளது என இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபு போல" என்று உதாரணமும் காட்டி, ஈண்டுக் கூறிய எது சமவாயத்தைக் கெடுத்துச் சையோகத்தைச் சாதித்தலின், தன்மிச் சொரூப பாதையா2 மென்றனர்.

1 சுலோக. வார்த். அனுமான, 100-101. 2 சுலோக. வார்த். அனுமான, 100-101.