தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       
325 கெடுத்தது தீய வெடுத்துக்காட் டாவன
தாமே திட்டாந்த வாபா சங்கள்
திட்டாந் தம்மிரு வகைப்படு மென்றுமுற்
கூறப் பட்டன விங்க ணவற்றுட்

325
உரை
328

       திட்டாந்த ஆபாசங்கள் - திட்டாந்தப் போலியென்பன; தீய எடுத்துக் காட்டாவன - குற்றமுடைய எடுத்துக் காட்டுக்களாம், திட்டாந்தம் இருவகைப்படுமென்று முற் கூறப்பட்டன - திட்டாந்தங்கள் இருவகையாகும் என முன்பே கூறியவற்றைக் கடைப்பிடிக்க எ - று.

          தீய எடுத்துக் காட்டாவன திட்டாந்தப் போலி (143-6) என்றாராகலின், அவையே ஈண்டும் கூறப்படுகின்றன வென்பார், "தீய எடுத்துக் காட்டாவன திட்டாந்த ஆபாசம்" என்றார். தாமே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. திட்டாந்தம் இருவகையா மென்பதை முன்னர், "ஏதுமில் திட்டாந்தம் இருவகைய, சாதன்மியம் வைதன்மியம மென" (136-7) என்று சொல்லி முறையெ இரண்டினையும் விளக்கிச் கூறியுள்ளதை நினைப்பித்தற்கு 'முற் கூறப்பட்டன' என்றார். திட்டாநதாபாசம் நிதரிசனாபாதம் எனவும்
வழங்கும்.