தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       

360
உபய தன்ம விகல மாவது
காட்டப் பட்ட திட்டாந் தத்திலே
சாத்திய சாதன மிரண்டுங் குறைதல்
அன்றியு மதுதான் சன்னு மசன்னும்
என்றிரு வகையா மிவற்றுட்சன் னாவுள

359
உரை
363

       உபய தன்ம விகலமாவது-உபய தன்ம விகலமென்னும் திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்திலே வாதியாற் காட்டப்பட்ட திட்டாந்தத்தின்கண்; சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்-சாத்தியத்தின் தன்மமும் சாதனமாகிய ஏதுவின் தன்மமும் என்ற இரண்டும் வியாத்தியில்லா தொழிவதாம் ; அன்றியும் - மேலும்; அது - அவ் வுபயதன்ம விகலம் ; சன்னும் அசன்னும் என்று இருவகையாம் - சன்னாவுள்ள உபய தன்ம விகலம் அசன்னாவுள்ள வுபய தன்ம விகலம் என்று இருவகைத்தாகும் எ - று.

         உபய தன்ம விகலம் இவ்வாறு இருவகையாகப் பிறராற் கூறப்பட வில்லை. இம் மணிமேகலை யாசிரியர் போல நியாயப்பிரவேச முடை யாரும் சன்னும் அசன்னுமாக இருவகையாகவே கூறியுள்ளார். சன் - உள்ளது; அசன் - இல்லது. இவ்வாறு இருவகையாகக் கொண்டதே யன்றி, உபய தன்ம விகலத்தை உபயாசித்தமென்று வழங்குவத்றகேற்ப இவ்விரண்டினையும் முறையே வித்யமானோபயாசித்த மென்றும் அவித்யமானோபயாசித்தம் என்றும் கூறுவர்.