தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

       


415




420
சாத னாவியா விருத்தி யாவது
சாத்திய தன்ம மீண்டு

சாதன தன்ம மீளா தொழிதல்
சத்த நித்த மமூர்த்தத் தென்றால்
யாதொன் றியாதொன்று நித்த மன்றஃ
தமூர்த்தமு மன்று கன்மம்போ லென்றால்
வைதன் மியதிட் டாந்த மாகக்

காட்டப் பட்ட கன்மம்
அமூர்த்தமாய் நின்றே யநித்த மாதலிற்
சாத்திய மான நித்திய மீண்டு
சாதன மான வமூர்த்த மீளா

412
உரை
423

       சாதனா வியா விருத்தியாவது-வைதன்மிய திட்டாந்தத்துச் சாதனா வியாவிருத்தி யென்னும் திட்டாந்தப் போலியாவது; சாத்திய தன்மம் மீண்டு - மீளுதற்குரியவற்றுள் சாத்தியப்பொருளின் தன்மம் மீள; சாதன தன்மம் மீதொழிதல்-சாதனமாகிய ஏதுவின் தன்மம் மீளாது குற்றப்படுதல்; சத்தம் நித்தம்-சத்தம் நித்தத்துவமுடையதெனச் சாத்திய வசனமும் ; அமூர்த்தத்து என்றால் - அமூர்த்தத்துவமுடைந தாகையாலெனச் சாதனவசன மும்கூறி; யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமும் அன்று - யாதொன்று நித்தமல்லாதது அஃது அமூர்த்தமுமல்லாதது என மீட்சிக்குரிய வியாத்தி வசனம் காட்டி; கன்மம் போல் என்றால் - கன்மம் போல எனத் திட்டாந்தம் கூறினால்; வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கன்மம் - எதிர்மறை நெறிக்குரிய திட்டாந்தமாகக் காட்டிய கன்மமானது; அமூர்த்தமாய் நின்று-அமூர்த்தத்துவ முடையதாய் நின்று; அநித்தமாதலின் - அநித்தத்துவ முடையதாதலால்; சாத்தியமான நித்தியம் மீண்டு - சாத்திய தன்மமான நித்தத்துக்கு மீட்சியாகிய அநித்தத்துவம எய்திற்றாக; சாதன வமூர்த்தம் மீளாது-சாதன தன்மமான அமூர்த்தத்துக்கு மீட்சியாகிய மூர்த்தத்துவம் எய்தாது அமூர்த்தத்துவமே எய்துதலால் குற்றமாயிற்று எ - று.

         சத்தம் நித்தம் அமூர்த்தத்துவத்தை யுடைமையால் என்று கூறிய வாதி, இதனை விபக்கத்து வாயிலாக வைதன்மிய திட்டாந்தம் காட்டி வலியுறுத்துவானாய், விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியாக, "யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமுமன்" றென்றும், அதற்கு வைதன்மிய திட்டாந்தமாகக் "கன்மம் போல்', என்றும் கூறுவானாயின் என்றார். நித்தமன்மையாகிய சாத்திய தன்ம மீட்சியும், அமூர்த்தமன்மையாகிய சாதன தன்ம மீட்சியும், விபக்கத் தொடர்ச்சி மொழிக்கண் எய்தியும், கன்மமாகிய திட்டாந்தத்தின்கண், அமூர்த்தத்துவமாகிய சாதன தன்மம் காணப்படுகிறதேயன்றி, அதன் மீட்சி காணப்படாமையின் "சாதனமான வமூர்த்தம் மீளா"தென்றும், கன்ம திட்டாந்தத்தில் நித்தமன்மையாகிய சாத்திய தன்ம மீட்சி காணப்படுதலால், "சாத்தியமான நித்திய மீண்டு" என்றும் கூறினார்.