பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை

25 கருதப் பட்டுங் கண்டநான குடைத்தாய
மருவிய சந்தி வகைமூன்று உடைத்தாய்த்

25
உரை
26

       கண்டம் நான்கு உடைத்தாய்-நான்கு வகையான கண்டங்களை யுடையதாய்; மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்-அக் கண்டங்கள் தம்மிற்புணருங் புணர்ச்சியை மூன்று வகையாக வுடையதாய் இந்நிதானம் இயலும் எ - று.

          பேதைமை முதலிய பன்னிரண்டனையும் நான்காகப் பகுத்து ஒவ்வொன்றையும் கண்டமெனக் கூறுப; அவற்றுள் பேதைமையும், செய்கையும் முதற் கண்டமெனவும், உணர்வு, அருவுரு, வாயில், ஊறு. நுகர்வு என்ற ஐந்தும் இரண்டாங்கண்டமெனவும். வேட்கை, பற்று, பவம் என்ற மூன்றும் மூன்றாங் கண்டமெனவும், தோற்றமும், வினைப்பயனும் நான்காங் கண்டமெனவும் கூறுப. இவற்றின் இயல்பை, "ஆதிக் கண்டமாகுமென்ப" என்பது முதலியவற்றால் விரியக் கூறுப. முதற் கண்டத்தின் ஈறாகிய செய்கைநும் இரண்டாங் கண்டத்தின் முதனின்ற உணர்வும் கூடும் கூட்டத்தை முதற் சந்தியென்றும், இரண்டாங்கண்டத் தீற்று நுகர்வும் மூன்றாங் கண்டத்து முதனின்ற வேட்கையும் கூடும் கூட்டம் இரண்டாஞ் சந்நியென்றும், மூன்றங் கண்டத்தீற்றுப் பவமும் நான்காங் கண்டத்து முதனின்ற தோற்றமும் கூடும் கூட்டம் மூன்றாஞ் சந்தியெனவும் கூறப்படும்; இவற்றின் இயல்பை. "பிறப்பின் முதலுணர்வாதிச் சந்தி" என்பது முதலியவற்றால் விளங்கக் கூறுப. இந்நிதானம் இயலும் என்பது வருவிக்கப்பட்டது.