பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை




40
நின்மிதி யின்றி யூழ்பா டின்றிப்
பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப்
பண்ணுந ரின்றிப் பண்ணப் படாதாய்

யானு மின்றி யென்னது மின்றிப்
போனது மின்றி வந்தது மின்றி
முடித்தலு மின்றி முடிவு மின்றி
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
இனையன வெல்லாந் தானே யாகிய

37
உரை
44

       நின்மிதி இன்றி - நிருமிக்க்படுதலின்றி; ஊழ்பாடின்றி - கெடுவதுமின்றி; பின் போக்கல்லது - ஒன்றன் வழியொன்று தொடர்வதல்லது. பொன்றக் கெடாதாய் - முற்றக் கெடுவதில்லையாய்; பண்ணுநர் இன்றிப் பண்ணப்படாதாய் - செய்யும் முதலையின்றித் தானே செயற்படுவதில்லையாய்; யானும் இன்றி என்னதும் இன்றி - யானெனதொன்னும் பற்றுக்கோடாவதின்றி; போனதும் இன்றி வந்ததும் இன்றி - போக்கு வரவு இல்லாததாய் முடித்தலுமின்றி முடிவுமின்றி - பிறர் முடிக்க முடிவதும் தானே முடிதலும் இல்லாததாய்; வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனை யனவெல்லாம் தானேயாகிய - வினையாயும் வினையாற்றோன்றும் பயனாயும் பிறப்புக்கும் வீடுபேற்றுக்கும் காரணமாகியும் இவை போன்ற பிறவற்றிற்கெல்லாம் தானே முதலாகியுமுள்ளன இந்நிதானங்கள் எ-று.

       நிருமிக்கப்படுவதாகிய நிருமிதி நின்மிதி யெனவந்தது ஊழ்படுதல் - முறையே வளர்ந்து முதிர்ந்து கெடுதல். பேதைமை முதலிய பன்னிரண்டும் நின்மிதி முதலாகக் கூறிய அனைத்தும் உடையவல்ல என்பார், "நின்மதியின்றி" யென்பது முதலாக விரியக்கூறி. முடிவில், இவற்றின் இயல்பு தானும் இது வென்றற்கு, "வினையும் பயனும்

       பிறப்பும் வீடும் இனையன வெல்லாம் தானே யாகிய" என்றார் ஒன்றின்வழி யொன்று தொடர்ந் தொடுங்குதலும் மீளத் தோன்றுதலு முண்டேயன்றி யறக் கெடுவதில்லை யென்றற்கு, "ஊழ்பாடின்றி" என்றதனோ டொழியாது "பின் போக்கல்லது பொன்றக் கெடதாய்" என்றார். இவை எப்போதும் செய்வோனை யவாவி நிற்குமென்பது தோன்ற, "பண்ணுநரின்றிப் பண்ணப்படாதாய்" என்றும், செய்வோர்செய்திப் பயன் கண்டு "யான் செய்தேன்" என்றும், "இஃது எனது" என்றும், எண்ணுதற் கேதுவாவதல்லது, அவை தாமே யல்ல என்றற்கு, "யானுமின்றி என்னதுமின்றி" யென்றும், இவ்வாறே பிறவும் கூறினார். இங்ஙனம் எதிர்மறை முகத்தாற் கூறியவர், உடன்பாட்டு வாய்பாட்டால் வற்புறுத்தற்கு இவை "வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையனவெல்லாம் தானேயாகிய" என்றார், இவ்வளவும் நிதானத்தின் பொதுவியல்பே கூறிற்றென வறிக. திருவாய் மொழிந்தது; நெறியுடைத்தாய். கண்ட நான்குடைத்தாய், மூன்றுடைத்தாய், மூன்றுடைத்தாய், உறுதியாகி, இடனாகி, அமைதியாகி, முகமெய்தி, பயன்களெய்தி, உடைத்தாய் கெடாதாய் பண்ணப்படாதாய், இன்றி , இன்றி இன்றி, தானேயாகிய 'பேதைமை, முதலியனவெனக் கூட்டி முடிவு செய்க. இக்கூறிய கருத்தையே மூலமாத்தியமிக காரிகையில் நாகார்ச் சுனர்1 எட்டு வகையாக்க் கூறுகின்றார்.
1 "No destruction. no production; no discontinuity, no per manence; no unity; no diversity: coming (appearance), no going (disappearance)" -- (11--13.)