பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


85
அருவுரு வென்பதவ் வுணர்வு சார்ந்த
உயிரு முடம்பு மாகு மென்ப

84
உரை
85

        அருவுரு என்பது - அருவுரு வெனப்படும் நிதானமாவது; அவ்வுணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப - அவ்வுணர் வொடு கூடிய உயிரும் உடம்புமாகும் என்று புலவர் சொல்லுவர் எ - று.

       உயிர் அருவமாயும் உடம்பு உருவமாயு மிருத்தலின் இரண்டையும் சேர வைத்து அருவுரு வென்றனர். வட நூல்கள் இதனை நாம ரூப மென்றும், நாமத்தின்கண் காட்சி கருத்து, உணர்வு, செய்கை முதலியன அடங்குமென்றும், ரூபத்தின்கண் நில முதலிய நான்கு பூதங்களின் கூட்டமாகிய உடம்படங்கு மென்றும் கூறுப. திபேத்திற் காணப்படும் ஓவியங்களும், இஃது ஒராற்றைக் கடக்கும் படகு போல வரையப்பட்டுள தென்பர். சாந்தோக்கியம், பிரகதாரணிய முதலிய வுபநிடதங்களிலிருந்தே இந்நிதானம் பௌத்தல்களால் மேற்கொள்ளப் பட்டதாமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சொல்லுதற்கேற்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.