பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை



வாயி லாறு மாயுங் காலை
உள்ள முறுவிக்க வுறுமிட னாகும்

88
உரை
89

        ஊறென வுரைப்பது - ஊறு எனக் கூறப்படும் நிதானமாவது; உள்ளமும் வாயிலும் - மனமும் இந்திரியங்களும்: வேறு புலன்களை மேவுதல் என்ப - தம்மின் புறமாகிய பொருள்களைப் பொருந்துவதென்று புலவர் கூறுவர் எ - று.

       
இதனை வடநூலார் பரிசம் என்பர். இச் சொல்லிரண்டும் மெய்யாகிய இந்திரியமே யன்றிக் கண் முதலியனவும் மனமும் பொருளை யுணர்

       
தற்குளதாகும் இயைபினை யுணர்த்தும் பொதுச்சொற்களாமெனக் கொள்க. கண்ணுக்கும் காணப்படும் பொருளுக்குமுள தாகும் இயைபும் ஊறெனப்படு மென்பதாம். பொறிகளில், "கோளில் பொறி"யு (குறள் 8.) முளவாதலின், கோடற்குரிய புலன்களை, "வேறு புலன்கள்" என்றும், மெய் முதலிய வாயில்களாற் கொண்டவற்றைத் தன் கண் மேவக் கொள்ளுதலும் தள்ளுதலும் செய்யும் செய்கை வேறுபாடு பற்றி, உள்ளத்தைப் பிரித்து, "உள்ளமும் வாயிலும்" என்றும் கூறினார். புலன் என்றது, புறவாயில்களாகிய பொருள்களை யென்க. மெய் முதலியவற்றால் உணரப்படும் புறப்பொருள்கள் புலன்களில் அடங்கிப் பொறி வயிலாக உள்ளத்துச் சென்று பொருந்துமாறுபற்றிப் "புலன்கள்" விதந்தோதப்பட்டனவென வறிக. இவ்வூற்றினை நையாயிகர் சந்நிகர்ஷம் என்பர்; வைசேடிகர் சம்பந்தமென்று கொண்டு, சையோகம், சையுக்த சமவாயம், சையுக்த சமவேத சமவாயம், சமவாயம், சமவேத சமவாயம், விசேடண விசேடியமென ஆறாகப் பகுத்துக் கூறுப. மற்று, பௌத்தர் நிதானவகையுள் வைத்து நையாயிகர் முதலியோர் கூறியவற்றுள் சிலவற்றை விலக்கியும் சிலவற்றை மேற்கொண்டும் கூறுப. நையாயிகர் கூறும் இந்திரியம், பொருள், சந்நிகர்ஷம், ஞானம் என்ற நான்கனுள், இந்திரியமும் பொருளும் வாயிலின் கண்ணும், சந்நிகர்ஷம் ஊற்றின் கண்ணும், ஞானம் பிறவற்றின்கண்ணும் அடங்குமா றறிக. இந் நிதானம் கண்ணில் அம்பு தைப்புண்டிருக்கும் ஒருவன்போல ஓவியஞ் செய்யப்படுகிறதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.