பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை



மூன்றாங் கண்டம் வேட்கை பற்றுக்
கரும வீட்ட மெனக்கட் டுரைப்பவை
மற்றப் பெற்றி நுகர்ச்சி யொழுக்கினுட்
குற்றமும் வினையு மாக லானே

141
உரை
144

        வேட்கை பற்று கரும வீட்டம் எனக் கட்டுரைப்பவை - வேட்கையும் பற்றும் கருமத் தொகுதியு மெனப் பகுத்தோதப்படும் நிதான மூன்றும்; அப்பெற்றி-அம்முறையே; நுகர்ச்சி யொழுக்கினுள் குற்றமும் வினையு மாகலான்-உணர்ச்சி முதல் நுகர்ச்சியீறாக ஐந்தனாலும் நிகழும் நிகழ்ச்சிக்கண் விளையும் குற்றமும் அதற்குரிய வினையுமாதலால்; மூன்றாங் கண்டம்-மூன்றாங் கண்டமெனப்படும் எ - று.

       
செய்கை வினையும்; அதன் பயனாகிய செயப்படுபொருள் கருமமுமாதலால்; அச் செயப்படுபொருட் டொகுதியைக் 'கரும வீட்டம்', என்றார். பிற விடங்களிற் கருமத் தொகுதி யென்றதும் இக்கருத்தே பற்றியென வறிக. கருமத் தொகுதியின் உடன் விளைவு பவ மாதலின், வேட்கை முதல் மூன்றுடன் பவத்தையும் கூட்டி, மூன்றாங் கண்டத்துள் அடக்கிக் கொள்க., இதனாலே நான்காம் கண்டத்தில் பவம் கூறப்படாமை யறிக. வேட்கை முதல் பவம் ஈறாக நின்ற நான்கனுள், வேட்கையும் பற்றும் குற்ற மென்றும், கரும வீட்டமும் பவமும் வினையென்றும் கொள்க.