பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை

145

நான்காங் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவென மொழிந்திடுந் துன்பம்
எனவிவை பிறப்பி லுழக்குபய னாதலிற்

145
உரை
147

        பிறப்பு பிணி மூப்பு சாவு என மொழிந்திடுந் துன்பமென இவை-பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடாகக் கூறப்படும் துன்பமும் என்ற இவை; பிறப்பில் உழக்கு பயனாதலின்-பிறந்தவுடம்பின்கண் எய்தி வருந்தும் வினைப்பயனாதலால்; நான்காம் கண்டம் - நான்காம் கண்டமெனப்படும் எ - று.

       
பிணி மூப்பு முதலியனவும் அவற்றிற்குச் சார்பாய பிறப்பும் உடம்பொடு தோன்றிய வழியே வந்து வருத்துவனவாதலால், "பிறப்பில் உழக்கு பயனாதலின்" என்றார். பயன் எனவே, வினைப்பயனாதல் பெற்றாம். மூன்றாங் கண்டத் திறுதியில் வினையைக் கூறலின் இதனை கண் அதன் பயனைக் கூறியவாறு காண்க.

       
இனி, மூவகைச் சந்திகளைக் கூறுகின்றார்.