பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


160




165
கால மூன்றுங் கருதுங் காலை
இறந்த கால மென்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையா னவற்றை
நிகழ்ந்த காலமென நேரப் படுமே
உணர்வே யருவுரு வாயி லூறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்ற மென்றிவை சொல்லுங் காலை
எதிர்கா லம்மென விசைக்கப் படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவல மரற்றுக் கவலைகை யாறுகள்

159
உரை
168

        காலம் மூன்றும்-காலவகை மூன்றனையும்; கருதுங்காலை - ஆராயுமிடத்து; மறந்த பேதைமை செய்கையானவற்றை - மறத்தலைச் செய்யும் பேதைமையும் செய்கையும் என்ற இரண்டு நிதானங்களையும்; இறந்தகாலம் என்னல் வேண்டும் - இறந்த காலமென அறியவேண்டும்; உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் என்றிவை-உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் என்ற இந் நிதானங்களை; சொல்லுங்காலை - கால வகையிற் கூறுபடுத் துரைக்குமிடத்து; நிகழ்ந்த காலமென நேரப்படும் - இவை நிகழ்காலமெனக் கொள்ளப்படும்; பிறப்பு பிணி மூப்பு சாவு

       
அவலம் அரற்று கவலை கையாறுகள் - பிறப்பும் பிணியும் முதுமையும் சாக்காடும் அவலமும் அரற்றும் கவலையும் கையாறு மென்ற இவைகள்; எதிர்காலம் என இசைக்கப்படும்-எதிர்காலத்தனவாம் என்று சொல்லப்படும் எ - று.

       
காலம் மூன்றென்று கொண்டு, அவற்றுள் இந்நிதானங்கள் பன்னிரண்டினையும் ஈண்டுக் கூறிய வகையே பகுத்தடக்குந் திறம் பெரும்பான்மை வழக்காகும் என்று1 ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மறத்தலைச் செய்யும் பேதைமையை ஒற்றுமை நயத்தால் "மறந்தபேதைமை" யென்றார். இப் பாகுபாடு தேரவாதத்தை மேற்கொண்டு கூறும் முறை யென்று ஓல்டன்பர்க்கென்பார் கூறுதலால் அறிகின்றோம். மகாயான புத்தர்கள் இக் காலப் பாகுபாட்டை விழைகின்றிலர். இது குறித்து ஆராய்ச்சி நிகழ்த்திய புலவர்கள் பலரும் மாறுபட்ட கருத்துக்களை வழங்கி முரணுவதுபற்றி இம் மணிமேகலை கூறும் முறையே ஓரளவிற் கொள்ளற்பாற்றென வமைவர்.
1 தரும சங்கிரகம். Sec. 127, 128, 129.